• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம், மே.வங்கத்திலும் ஹனுமன் சிலை: பிரதமர் மோடி

ByA.Tamilselvan

Apr 16, 2022

குஜராத்தின் மோர்பி பகுதியில் ஹனுமன் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் . அப்போது குஜராத்தை தொடர்ந்து விரைவில் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் ஹனுமன் சிலை நிறுவப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி மிகபிரமாண்டமான 108 அடி சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். அதை தொடர்ந்து பேசிய பிரதமர்
” இந்திய நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலை நிறுவப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஷிம்லாவில் ஒரு சிலை ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டது. குஜராத்தில் இரண்டாவது சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு சிலைகள் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் நிறுவப்படும். இது வெறும் சிலை நிறுவும் முயற்சி அல்ல. இது நமது கொள்கையான ஒரே பாரதம்; வளமான பாரதம் என்ற கொள்கையை நிலைநிறுத்தும் முயற்சி” என்று சிலையை திறந்து வைத்துப் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவில் பெட்ரோல் ,டீசல் ,சிலிண்டர் விலை உயர்வால் பல சிரமங்களை பொதுமக்கள் அனுபவித்துவரும் நிலையில் படேல் சிலை தொடங்கி தற்போது நாடு முழுவதும் அனுமன்சிலைகளை நிறுவுவதில் மோடியும் ,மத்திய அரசும் முனைப்பு காட்டுவது பொதுமக்கள்மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.