• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம்
500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை
கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்து இருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயல்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். பெரும்பாலான மீனவர்கள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறினர்.