அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்…
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டுமென நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அடிப்படையில் அறம் சார்ந்த வாழ்வே இஸ்லாத்தின் அடிப்படை. ஈகை,அன்பு,தன்னலமற்றத் தன்மை உள்ளிட்ட வாழ்க்கை முறையே ரமலான் மாத இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையாகும் .ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து பிறர் துன்பங்களை அறியும் வண்ணம் தன்னை வருத்தி ரமலான் அன்று பிறருக்கு உதவும் ஈகைப்பெருநாளாக உலகம் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள். எந்தவித வேறுபாடுமின்றி சக மனிதனின் துன்பத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் தன்னுடைய பாவங்களை உணர்ந்து நல்வழிக்கு வர வேண்டும் போன்ற நல்ல கருத்துக்களை உணர்த்துவது தான் ரமலான் மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.
மதங்களை தாண்டி அறத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்பவர்களின் புகழ் மட்டுமே உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் அவ்வாறான வாழ்க்கை முறையை இஸ்லாம் போதிக்கிறது வாரத்தின் 7நாட்களும் ஒவ்வொரு வகையான இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. தற்போதைய இந்திய ஒன்றியத்தின் தேவை மதநல்லிணக்கமாகும் அதை தாம் நாம் அனைவரும் விரும்புகிறோம், தனிப்பட்ட ஒருவரின் நிகழ்வை அவர் சார்ந்த சமூகத்துடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகும் போது அச்சமூகம் பெரும் பின்விளைவுகளை பாதிப்புக்களை சந்திக்கிறது. ஆகவே தற்போதைய காலக்கட்டத்தில் சகிப்புத்தன்மை உருவாக வேண்டும்,சகிப்புத் தன்மை என்று கூறுவது தற்போதைய சிலரில் தவறான பிரச்சாரத்தால் தவறான வாதமாக எடுத்துக்கொள்ளப் படுகிறது .ஆகவே சகிப்புத்தன்மை என்பது நமக்கு பிடிக்கா விட்டாலும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதாகும் .ஆகவே இன்றைய தேவை சகிப்புத்தன்மை மட்டுமல்ல ஏற்றுக்கொள்வது தான் முக்கியம், ஏற்றுக்கொள்ளல் என்றால் பிறரை புரிந்து கொண்டு அவரை ஏற்றுக்கொள்வதாகும் இந்த தன்மை நமது நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தினர் மத்தியிலும் ஏற்பட வேண்டும்.இந்த கருத்தின் அடிப்படையிலயே நானும் எனது இயக்கமுமான அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் அனைத்து தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது, கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஈகைப்பெருநாளை பெரும் திருநாளாக கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாள் வாழ்த்துக்களை மனமகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு,மதச்சார்பின்மையை இந்தியாவில் கட்டி அமைப்பதற்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று என் ஆருயிர் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களோடு உறுதி கூறுகிறேன் என அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் பொதுச்செயலாளர் சே.பசும்பொன் பான்டியன் MA.,BL., தெரிவித்துள்ளார்.