இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
பிரபல இயக்குனர் ராம் “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் வருகிற 4-ம் தேதி நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பறந்து போ’ படம் திரையிட அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது. இதற்கு முன்னதாத ராம் இயக்கிய ‘பேரன்பு மற்றும் ஏழு கடல் ஏழு மலை’ படங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.