இயற்கையுடனும் சகோதர உறவை பேண வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் மேற்கு வங்காள மாநிலம் மேதினிபூர் பாஸ்சிம் பகுதி மக்கள்.
நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தை போற்றும் இந்த நன்னாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி உறவை பலப்படுத்துகிறார்கள். சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்கி அன்பை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில், இயற்கையுடனும் சகோதர உறவை பேண வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் மேற்கு வங்காள மாநிலம் மேதினிபூர் பாஸ்சிம் பகுதி மக்கள்.
ரக்ஷா பந்தன் நாளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பகுதி குழந்தைகளும், பெரியவர்களும் மரங்களுக்கு ராக்கி கட்டினர்.
“இந்த ஆண்டு, சுற்றுச்சூழலுடனான நமது உறவை நினைவுகூர்ந்ததாகவும், இதனால் அடுத்த தலைமுறையினர் மரங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்வதாகவும்”அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.