• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பிப்.27ல் மாநிலங்களவைத் தேர்தல்

Byவிஷா

Jan 29, 2024

15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 8 வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, பிப்.15 வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 10 இடங்களுக்கும், ம.பி, மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.