• Sun. Apr 28th, 2024

பிப்.1ல் மக்களவையின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர்

Byவிஷா

Jan 29, 2024

பிப்ரவரி 1ஆம் தேதியன்று 17வது மக்களவையின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்பார்ப்புகளை அதிகம் ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதனிடையே ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வரவு செலவு அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வது வழக்கம். இவ்வாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், முழுமையான பட்ஜெட்டிற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த இடைக்கால பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகளுக்கு பதிலாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக பெண் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் சமான் நிதிக்கான 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அறிவிப்பு இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2023-2024ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மானியங்களை விடுவிப்பது குறித்தும் மக்களவையில் விவாதிக்கப்படும்.
நாட்டின் 17வது மக்களவையின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற நாளை (ஜனவரி 31) துவங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதல் நாளில் பங்கேற்று இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார்.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தொடரின் போது, வருகிற ஜூலை மாதம் வரையிலான நாடாளுமன்ற செலவீனங்களுக்கான நிதிக்கும் ஒப்புதல் பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *