
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் உள்ளது சாய் விளையாட்டரங்கம். இங்குள்ள முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி சிலைக்கு அவரது 34-ஆம் ஆண்டு நினவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராஜகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம்,இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் சரத் சந்திரன், மாநில பொதுகுழு உறுப்பினர் இராஜேந்திரன்.நகர தலைவர் இராமனுஞ்சம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாற்று கட்சியிலிருந்து இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.அவர்களை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்.பொன்னாடை போர்த்தி கட்சியில் இணைத்து கொண்டனர்.
