• Wed. Jan 22nd, 2025

ரன்பீர் கபூர் நடிக்கும்இந்திபடம் இயக்கபோகும் ராஜமவுலி

ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டுக்காக காத்துள்ளார்இயக்குனர்ராஜமவுலிஜனவரி 7 அன்று வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திரபிரசாத்தே கதை எழுதி வருகிறார்.

ஆனால் இந்த நேரத்தில் தற்போது பாலிவுட்டில் ஒரு புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஆர்ஆர்ஆர் படம் வெளியானதும் சிறிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூரை வைத்து ஒரு ஹிந்தி படத்தை ராஜமவுலி இயக்கப்போவதாகவும், அந்த படத்தை சில மாதங்களிலேயே இயக்கி முடித்த பிறகு மகேஷ்பாபு படவேலைகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ராஜமவுலி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.