ஆர்ஆர்ஆர் படம் வெளியீடு தள்ளிப்போனத்தில் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேசமயம் ரசிகர்கள்சோர்வடைந்துவிடாதவகையில் படம் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையும் அது சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் படத்தின் இயக்குநர் ராஜமவுலி இதனால்
ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர்.
அப்படி ஜூனியர் என்டிஆரின் அறிமுக காட்சி குறித்து ஒரு பிரமிப்பூட்டும் தகவலை கூறியுள்ளார் ராஜமவுலி.இந்தப்படத்தின் அறிமுக காட்சி பல்கேரியாவில் உள்ள காடு ஒன்றில் படமாக்கப்பட்டது. அதில் ஜூனியர் என்டிஆர் வெறுங்காலோடு ஓடிவர வேண்டிய காட்சி. காட்சிப்படி வெறும் காலில் அவர் ஓட வேண்டும்..
ஆனால் ரிகர்சலின்போது கால்களில் ஷூக்களை அணிந்தபடி ஓடியுள்ளார் ஜூனியர் என்டிஆர். காட்சியை படமாக்க ஆரம்பித்ததும் வெறும் காலில் மின்னல் வேகத்தில் ஓடினாராம் ஜூனியர் என்டிஆர்.அதற்கு முன்னதாக ஒரு ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் ஒருவரை ஓடவைத்து அந்த பாதையில் கற்கள், முட்கள் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என சோதனை ஓட்டமும் நடத்தினார்களாம்.. ஆனால் அவர் ஓடியதை விட ஜூனியர் என்டிஆரின் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது என பிரமிப்புடன் கூறியுள்ளார் ராஜமவுலி.