• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

Byமதி

Dec 13, 2021

வடகிழக்கு பருவ காற்று காரணமாக வரும் 16 -ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் அடுத்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், பம்மல், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், ராயப்பேட்டையில் உள்ளிட்ட பகுதிகளில் மழை. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். உள்மாவட்டங்களில் மிதமான மழை இருக்கக்கூடும் என தகவல்.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்.