• Wed. Apr 24th, 2024

100-வது நாளை நெருங்கிய ராகுல் காந்தியின் யாத்திரை

ByA.Tamilselvan

Dec 13, 2022

கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல்காந்தியன் இந்திய ஒற்றுமையாத்திரை 100 வது நாளை நெருங்கி வருகிறது இதனை முன்னிட்டு ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர். இந்திய ஒற்றுமை யாத்திரை, வரும் 21-ம் தேதி அரியானாவிற்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *