• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தி ஒரு போர் வீரர்-பிரியங்கா அதிரடி!

ByA.Tamilselvan

Jan 3, 2023

அரசின் எந்த பலத்திற்கும் அஞ்சாத போர் வீரர் ராகுல் காந்தி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது நடைபயணத்தில் டெல்லியிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். லோனி எல்லையில் அவரை வரவேற்ற பிரியங்கா காந்தி, “அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் பல அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம், ஆனால் என் சகோதரரை ஒருபோதும் வாங்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரியில் இருந்து 3,000 கி.மீ தூரம் கடந்து உத்தரப்பிரதேசத்தில் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார். ராகுல் காந்தி குளிர்காலத்தில் கூட குளிர்வதில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் அவர் உண்மையின் கவசம் அணிந்துள்ளார் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்தது. ஆனால், அவர் உண்மையின் பாதையில் இருந்து பின்வாங்கவில்லை என்றார். ராகுல்காந்தி ஒரு போர்வீரன் என்பதால் அவர் எதற்கும் பயப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் உள்ள அனைவரும் இந்த அன்பை பரப்புவதற்கு முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.