இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது வழிகாட்டுதலின் படி இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. இதனிடையே இந்திய அணி இவரது பயிற்சியின் கீழ் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இருந்தது. இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என கூறப்படுகிறது.