• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ரகுமான்

ByA.Tamilselvan

Jan 6, 2023

தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ் சினிமாவின் இசைப்புயலாக சுழலும் ஏ.ஆர் ரகுமானின் பிறந்தநாள் இன்று. 1992ல் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 3 தசாப்தங்களாக மக்களை ஆண்டுவருகிறார் ரகுமான். மேற்கத்திய, கர்நாடக, கிராமிய, ராக், பாப் என்று அனைத்து இசை பிரிவுகளையும் அள்ளி சாப்பிட்ட இவர் ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதை பெற்று ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்றதெல்லாம் தமிழ் சினிமாவின் பெருமை.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இது ஒரு டிஜிட்டல் மியூசிக் பிளாட்ஃபார்ம்; இசை ஆர்வலர்கள் மற்றும் பிற கலைஞர்களின் புதிய படைப்புகள் இந்த தளத்தில் பதிவிடப்படும்.பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த தளத்தில் பதிவேற்றப்பட உள்ளது.