

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் வையத்தான் கிராமத்தில் உள்ள கிணற்றில் முயல் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வையத்தான் கிராமத்திற்கு சென்ற தவுலத் பாதுஷா தலைமையிலான தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முயலை பத்திரமாக மீட்டனர் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முயலை உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.


