

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து கட்சிகளிலும் சூடு பிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் களம் இறங்கியுள்ளது.
இதை தொடர்ந்து சாத்தூர் நகராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் சாத்தூர் நகரத்தில் உள்ள சமுதாய தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டுனர்.



