• Sat. Apr 20th, 2024

சேலத்தில் வீரபாண்டியார் இல்லாத பொதுக்கூட்டம்.. அவரின் நினைவுகளுடன் மட்டும்….

Byமதி

Oct 30, 2021

சேலம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவினர் ஒன்று கூடிய மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அனைவரும் வீரபாண்டியார் பெயரை உச்சரிக்காமல் யாரும் பேசவில்லை.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், தப்பித்தவறி கூட மேடையில் உள்ள பிளக்ஸ் பேனரில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டியாருடைய புகைப்படம் இல்லாததுதான். இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் அனைவரும் முகமும் கருகிப் போயிருந்தது.

“இதில் மகளிர் அணி சங்ககிரி நிர்மலா அவர்கள் பேசும்போது, அமைச்சரிடம் முக்கியமாக ஒரு கோரிக்கை வைக்கிறேன், சேலத்தில் கோஷ்டி பூசல் அதிகமாக இருக்கிறது அதை ஒழித்தால் கட்சி நன்றாக இருக்கும் என பேசினார்.

அமைச்சர் வீரபாண்டி பிரபு அவர்களை பேச அழைக்கும் போது அங்கு கூடியிருந்த அனைவரும் விசில் சத்தம் அனல் பறந்தது. ஆனால் பிரபு அவர்கள் அண்ணன் இறந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை ஆகையால் என்னால் பேச இயலாது பேசிய அழைத்தமைக்கு நன்றி என பேசி விட்டுச் சென்று விட்டார்.

பிறகு பாரப்பட்டி சுரேஷ் அவர்கள் பேசும்போது, 10 ஆண்டுகாலமாக எங்களை கொடுமை படுத்தியது, பல துன்பங்களுக்கு ஆளாக்கியது அதிமுக அரசு. ஆனால் பத்து ஆண்டுகளாக தலைமை சொல்லும் சொல்லுக்கு நாங்கள் கட்டுப்பட்டு இருந்தோம். இதேபோல் தலைமை வழி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் பேசும்போது, சேலம் மாவட்டத்திலிருந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை. பாலங்கள் கட்டியது என பெருமையாக பேசுகிறார். ஆனால் மக்கள் பயங்கர துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். குடிநீர் வசதி முதல்கொண்டு
எந்த வசதியும் செய்து தரவில்லை. இப்பொழுதுதான் ஆரம்பகட்ட வேலை நடந்து கொண்டுள்ளது. ஆயிரம் பழனிசாமிகள் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என வெளிப்படையாக பேசினார்.

இறுதியாக அமைச்சர் பேசும்போது என்கிட்ட ஒன்றுமில்லை… வீரபாண்டியார் இருந்த மண்.. அவர் எப்படி செயல்பட்டாரோ அதேபோல் செயல்படுவேன்.. கட்சிக்காக யார் அதிகமாக உண்மையாக உழைத்தாலும் அவர்களை நாங்கள் கைவிடமாட்டோம் என வெளிப்படையாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *