

சென்னை கொட்டிவாக்கத்தில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தை 181 வது வட்டச் செயலாளர் கே வி சாத்தப்பன் தலைமையில் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்கிட, மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு இந்த விழாவில் திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக சைதை சாதிக்கு கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாதனைகளை பொதுமக்களிடம் இது பெண்களுக்கான ஆட்சி. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சி என்று பொதுமக்களிடம் கலகலப்பாக பேசி மக்களை சிரிக்க வைத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தமிழக முதல் மு க ஸ்டாலினை வாழ்த்தி பேசி உதயசூருனுக்கு ஓட்டு போடுமாறு மக்களிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில். 181 வது மாமன்ற உறுப்பினர் கல்வி நிலை குழு தலைவர் விஸ்வநாதன். மண்டலம் 15 மண்டல குழு தலைவர் மதியழகன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எட்டியப்பன். பாலவாக்கம் சோமு, மனோகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் என ஏராளமான கலந்து கொண்டு இந்த பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள்.

