

தமிழக காவல்துறையில் 86 வது பேஜ்ஜில் பணியில் சேர்ந்த காவலர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அப்பொழுது பணியில் சேர்ந்த காவலர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் ஆணையாளர் உதவி ஆணையாளர் ஆய்வாளர் உளவுத்துறை உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றி விட்டு பணி ஓய்வு பெற்ற நிலையில்,

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மற்றும் வெளிநாடுகளில் குடியேறிய நிலையில், சென்னை பரங்கிமலை அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் இருக்கக்கூடிய சிறிய மண்டபத்தில் 86 பேஜில் பணிபுரிந்த காவலர்கள் மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் பணியின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

