• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தவெக ஆட்சியில் கடும் விலைகாசி உயர்வால் பணம் வீக்கம் அதிகரித்து விட்டது-ஆர் .பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Oct 6, 2026

தமிழக அரசியல் வரலாற்றிலே ஆட்சிக்கு வந்த இந்த 4 மாதத்தில் நடக்கும் இடைத்தேர்தலில், இதுவரை நாம் காணாத வகையிலே ஆளுங்கட்சிக்கு இவ்வளவு அதிகமான எதிர்ப்பு இருப்பதை இப்போது நாம் களத்திலே பார்க்கிறோம்.

தமிழக மக்களை தவறாக மதிப்பீடு செய்த தவெகவினர், முதல்வர் விஜய் முகத்தை ஒருமுறை காண்பித்தால் போதும்; வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த தவெக கட்சிக்கு, இந்த இடைத்தேர்தல் சவாலாக அமைந்ததை களத்திலே நாம் பார்க்க முடிந்தது.

ஆளுங்கட்சி வேட்பாளர் என்ற வெற்றிக்கான அந்தஸ்தோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம், வேட்பாளர் மற்றும் அமைச்சர்களை எல்லாம் வாக்காளர்களிடம் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது. இது. தவெக கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். ஏனென்று சொன்னால், துரோகம் செய்தவர்களை வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை கொடுத்து, துரோகம் வேட்பாளரை தேர்வு செய்து, தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணுகிற வகையிலே இப்போது தவெக கட்சியினருக்கு புரிந்திருக்கும்

தேர்தல் களத்தில் சந்தித்த எதிர்ப்பின் மூலமாக.செல்லுகிற இடங்களில் எல்லாம் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், தவெகவினர் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, உடனே காவல்துறையின் பாதுகாப்போடு வேட்பாளரும் அமைச்சர்களும் பிரச்சாரத்திற்கு செல்லலாம் என்ற எடுத்த முயற்சியும், கடைசியில் தோல்வியிலே தான் முடிவடைந்தது.

ஆகவே, துரோகம் செய்தவர்களை முதன்மையான வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று தவெகவினரே பேசிக்கொண்டதை நாம் களத்திலே பார்க்க முடிந்தது. மொத்தத்திலே, ரியாலிட்டியை மறந்துவிட்டு, ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு, இந்த. இடைத்தேர்தலில்,மக்கள் சேவைன்னா என்ன? மக்கள் பணினான என்ன? இதன் மூலம் மக்கள் தொண்டின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் நிச்சயம் தவெக கட்சியினர் உணர்ந்திருப்பார்கள்.

தேர்தல் களத்தில் வேட்பாளரின் துரோகம் முதன்மை பெற்றதால், இந்த 4 மாதத்திலே தவெக ஆட்சியின் சாதனைகள் என்று சொல்வதற்கு தவெகவினருக்கு களம் கை கொடுக்கவில்லை என்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டது. அதோடு, அமைச்சர்கள் தவெக எம்எல்ஏக்கள், வாக்கு சேகரிக்கவே செல்ல முடியாமல் தட்டு தடுமாறினார்கள்.

ஜனநாயக கடமை ஆற்றி வந்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு, விசாரணை என்ற பெயரிலே தேர்தல் பணியை முடக்கவும் முயற்சி எடுத்தார்கள். மொத்தத்திலே, தூய சக்தி என தேர்தலுக்கு முன்புவரை பரப்புரை செய்த தவெக ஆட்சியில், இன்றைக்கு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளே இதை விசாரணை செய்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். பணிகள் முடிவடைந்த பிறகு, ஒப்பந்த புள்ளி கோருவது, டெண்டர் அறிவிப்பது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 70 வரை வசூலிப்பது, டாஸ்மார்க் கடைகளிலே 10 ரூபாய் இருந்ததை 50 ரூபாயாக வசூலிப்பது, ஒப்பந்தக்காரர்களிடமே சன்மானம் வாங்குவது, பொது வினியோக திட்டத்திலே கொள்முதல் செய்ய பாமாயில் உள்ளிட்டவற்றில் ஊழல் செய்வது, இப்படி ஒவ்வொரு ஊழலாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்த தவெக ஆட்சி அமைத்த இந்த 4 மாதங்களில்.அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பிறகு, அதை வாபஸ் வாங்குவது, மொத்தத்திலே இந்த ஆட்சி மர்ம ஆட்சியாகவே இருக்கிறது. அரசாணைகள் வெளியிடாமல், அரசு தங்களுக்கு வேண்டியவர்களை நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களை, அரசு நியமனங்கள் செய்யப்படுவது, இவையெல்லாம் மூடி மறைக்கப்படுகிறது

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்பட்டிருக்கிற கடுமையான மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பிரச்சனை, அதிகரித்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. அரிசி, சர்க்கரை, காய்கறி எண்ணெய் எல்லா விலைகளும் விண்ணை முட்டும் அளவிலே உயர்ந்துவிட்டது.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. 125 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியமும் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. இப்பிரச்சனைகளால், மொத்தத்திலே தமிழ்நாட்டிலே பணப் புழக்கமே குறைந்துவிட்டதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவையெல்லாம் முதல்வர் விஜய் பிரச்சாரத்திலே, குறிப்பாக ரோடு ஷோ பிரச்சாரத்திலே, அவர் முன்னெடுத்த முயற்சிகள், இந்த பிரச்சனைகள் எல்லாம் மக்கள் பிரச்சனைகள் எல்லாம் மிகப்பெரிய அளவிலே அந்த பிரச்சாரத்தின் பின்னணியை ஏற்படுத்தியதை நாம் களத்திலே பார்க்க முடிந்தது.

இரண்டு தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரத்தில் உள்ளூர் வாக்காளர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையில் தான் இந்த பிரச்சனைகளை முன்வைத்து, அவர்கள் புறக்கணித்தார்கள் என்பதையும் நாம் காண முடிந்தது.

ஆகவே, பெருந்திரளான அளவில் மக்கள் திரளுவார்கள் என்று தவெகவினர் எதிர்பார்த்ததில், ஏமாற்றமும் தோல்வியும் தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையிலே தான், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க, சாலையோர டீக்கடையிலே அமைந்த முதல்வர் விஜய் டீ குடித்ததும், வயல்வெளியிலே இறங்கி டிராக்டர் ஓட்டியதும், அடுத்த கட்சிக்காரர் தோட்டத்தில் போய் முருங்கைக்காய் பறித்ததும், மாட்டு வண்டியை ஓட்ட முயற்சித்ததும் தான், ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்தி வெளியிடுவதற்கும், ரீல்ஸ் வெளியிடுவதற்கும் பயன்பட்டதே தவிர, வாக்காளர்களிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

தன் வசீகரத்தால் விஜய் ஐந்து நிமிடம் பேசினாலே போதும், வாக்காளர்கள் தவெகவிற்கு வாக்களித்து விடுவார்கள் என வீராப்பு பேசி வந்த தவெக கட்சியினருக்கு, தேர்தல் பயம்னா என்ன? மரண பயத்தை தவெகவிற்கு இந்த இடைத்தேர்தல் தேர்தல் களம் காட்டி இருப்பதை கள நிலவரத்திலே நாம் அறிய முடிந்தது.

இடைத்தேர்தல் பொதுவாக பொதுவாக இடைத்தேர்தலில்
ஆளும் அரசுக்கு எதிராக தீர்ப்பு அமைகின்ற போதுதான், மக்களை மறந்து, விளம்பர வெளிச்சத்தில் தடுமாறுகின்ற ஆளும் அரசுக்கு கள நிலவரத்தின் உண்மை எதார்த்தம் மக்களுடைய எதிர்பார்ப்பு, மக்களின் நம்பிக்கை, மக்கள் எதிர்பார்க்கிற வளர்ச்சி, வேலைவாய்ப்பின் முக்கியத்துவம், தொலைநோக்கு பார்வை, வேலைவாய்ப்பினுடைய அவசியம், இவையெல்லாம் புரிந்து கொண்டு

,ஆட்சி நிர்வாகத்தை மக்கள் நலன் சார்ந்து விளம்பர வெளிச்சத்தை தள்ளி வைத்துவிட்டு, வசீகரத்தை தள்ளி வைத்துவிட்டு, கவர்ச்சியை தள்ளி வைத்துவிட்டு, வளர்ச்சியை முன்னிறுத்தி, ஒரு அரசு நிர்வாகம் நல்ல நிர்வாகமாக செலுத்த வேண்டும் என்று சொன்னால், இந்த இடைத்தேர்தல் தீர்ப்பு ஒரு நல்ல பாடமாக, ஒரு நல்ல தீர்ப்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியை வலிமையடைய செய்கின்ற வகையிலே, வாக்காளர்கள் கவனத்திலே கொண்டு, ஏற்கனவே வெற்றி பெறச் செய்த இரட்டை இலையை மீண்டும் வளரச் செய்து, எடப்பாடியார் போன்ற சாமானிய தலைவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை தேர்தல் களத்திலே ஏற்படுத்தி, உற்சாகத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி, உண்மையாக உழைக்கிற தலைவர்களுக்கு இந்த தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக என்றைக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை இந்த உலகத்திற்கு, இந்திய திருநாட்டிற்கு சொல்லுகிற தீர்ப்பாக இரட்டை இலை இரண்டு தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடு வாக்களிப்பீர், இரட்டை இலை வெற்றி பெறச் செய்வீர், இரட்டை இலை என கூறினார்.