• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பொது நூலகம்திறப்பு விழா..!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோணம் பகுதியல் ரூ 2.50 கோடி மதிப்பிட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அந்த நூலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
இதில் அதிகாரிகள் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.