• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டகயாக பூஜை..,

ByKalamegam Viswanathan

Sep 13, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஊர்க்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் அர்ச்சகர்கள் விக்னேஸ்வரர் பூஜையுடன் யாக வேள்வி தொடங்கி மகாயாகம் நடைபெற்றது.

யாக வேள்வியை தொடர்ந்து ஊர்க்காவலன் சாமிக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கச்சிராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் யாக பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர்க்காவலன் சாமியை வழிபட்டுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை கச்சிராயிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.