• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புளியங்குடியில் மூதாட்டிகளை குறிவைத்துத் தாக்கும் சைக்கோ கொள்ளையன்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மூதாட்டி களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொள்ளையன் மீது நடவடிக்கை எடுக்க புளியங்குடி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த செல்லையா மனைவி சமுத்திரக்கனி (80) இவர் இரவு 10.30 மணி அளவில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். பணம் நகை எதுவும் சிக்காததால் ஆத்திரமடைந்தவர் மூதாட்டியை கண்களை தாக்கியுள்ளான். சத்தம் கேட்டு வந்த, அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர்! மேலும் கடந்த மாதம் டிஎன் புதுக்குடி பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் (90) இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சைக்கோ மூதாட்டியின் கழுத்தை நெரித்து உள்ளான்.

மேலும் டிஎன்பிசி தேர்வுக்காக படித்து விட்டு இரவு 10 மணிக்கு அளவில் வரும் டி.என்.புதுக்குடி பகுதி மாணவிகளிடம் சைக்கோ செயின் பறிக்க முயன்றதால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இவ்வாறு தினசரி ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.