தென்காசி மாவட்டத்தின் மிகப் பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சியின் முதல் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராசைய்யா, நகர்மன்ற ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங், நகரமைப்பு அலுவலர் ஹாஜா மைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளநிலைப் பொறியாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல் சிவா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தலைவர், துணைத் தலைவர் உட்பட 32 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகர்மன்ற தலைவர் இருக்கைக்கு ஹபீபுர் ரகுமானை ஆணையர் ரவிச்சந்திரன் துணைத் தலைவர் ராசையா ஆகியோர் மாவட்ட திமுக செயலர் செல்லத்துரை தலைமையில் அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை அரசு மருந்துவமனை முன்புள்ள இடத்தில் வைத்திட சிறப்பு தீர்மானத்தை துணைத் தலைவர் ராஜையா முன் மொழிய முன்னாள் நகர திமுக செயலரும் 2l வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மதலி முன்மொழிந்தனர். 2001 முதல் -2006 வரை நகர்மன்ற தலைவராக இருந்த தாயம்மாள் மறைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகளை, பேசினர்
இந்த கூட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும் தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் ஒடைகள் சுத்தம் செய்வது, குப்பைகள் அள்ளுவது குறித்து விவாதங்கள் நடைபெற்றது. உறுப்பினர்கள் கொண்டு வந்த 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர மன்றத் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் பேசுகையில் நகர மன்றத்தின் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும். நகராட்சிக்கு தேவையான நிதியை தமிழக அரசிடம் பெற்று உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என பேசினர்.முன்னதாக நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட கூட்ட அரங்கை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் அய்யாபுரம் கூட்டுறவு கூட்டுறவு சங்க தலைவருமான டாக்டர் செல்லத்துரை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது, நகர்மன்ற உறுப்பினர்கள் சிட்டி திவான் மைதீன்,லிங்கம், ராமகிருஷ்ணன், கண்ணன், அரஃபாவ காப், ரேவதி, பாலீல்வரன், சுபா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.