வரும் 23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 11 மணி முதல்,ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,மாணவர்களுக்குப் பிறந்த தேதி,தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மாணவர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.