• Thu. Dec 12th, 2024

மதுரையில் தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Byp Kumar

Jan 20, 2023

டெஸ்ட் பர்சேஸ் முழுவதுமாக ரத்து செய்யக் வேண்டும் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பில் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையிலும்மாநிலத் துணைத் தலைவர் சூசைஅந்தோணிமாநில மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் மண்டல பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மண்டல இளைஞரணி தலைவர் சில்வர்சிவா முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்சிறப்பு அழைப்பாளராக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார்கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார்.


இந்தஆர்ப்பாட்டத்தில் டெஸ்ட் பர்ச்சேஸ் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். உணவுப் பொருட்களின் மேல் உள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்ய வேண்டும் , கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் மற்ற சுங்கச்சாவடிகளில் உள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும் ,மின் கட்டணம் பெட்ரோல் டீசல் கேஸ் எரிபொருள் கட்டணங்களை குறைக்க வேண்டும் கப்பலோட்டிய தமிழன் வ உ சிக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும். உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக மண்டல துணைத் தலைவர் குட்டி(எ)அந்தோணிராஜ் இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ஸ்வீட்ராஜன் வழக்கறிஞர் அணி கண்ணன்வடக்கு மண்டல தலைவர் சரவணன்மற்றும் கரன்சிங் வாசுதேவன், பிரபாகரன், பிச்சைபழம்மற்றும்மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்