• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக நிலைப்பாடு என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. இத்தொகுதியில் தேமுதிக போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. 23ம் தேதி அன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருந்த அம்மா முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கி இருந்தது. வேட்பாளராக நின்ற சம்பத் சுமார் 1200 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று இருந்தார்.
இந்நிலையில் இப்போது நடைபெற உள்ள இடை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனியாக நிற்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேமுதிக தனியாக நிற்கும் பட்சத்தில் கட்சி வேட்பாளராக தேமுதிக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் ஆனந்த் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.