• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நில அதிர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Apr 21, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து உரிய ஆய்வறிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டலச்செயலாளர் சைமன் ஜஸ்டின், மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், சங்கிலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.