தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எதிராக நாளை காலை விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விருதுநகரில் நாளை 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக நம் காவல்துறையை செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறது. 22 வயது நம் சகோதரியின் மீது விருதுநகரிலே நடத்தப்பட்ட கூட்டு பலாத்காரம் நம்முடைய நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை இதுவாக தான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.