• Mon. Apr 21st, 2025

பிரபல ரவுடி அடித்துக் கொலை – போலீசார் விசாரணையில் அதிர்ச்சி!

ByP.Kavitha Kumar

Mar 22, 2025

கும்பகோணம் அருகே பிரபல ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பிரபல ரவுடியான அவர் மீது சுவாமிமலை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம் தான் இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் காளிதாஸ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வீட்டின் முன்புறம் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை போலீசார், காளிதாஸ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காளிதாஸின் அண்ணன் தேனாம்பேட்டை நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். குடிபோதையில் காளிதாஸ் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததால் அவரது அண்ணன் பாண்டியன் நேற்று இரவு காளிதாஸை கண்டிக்க சென்றுள்ளார்.