• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

லாபமாக பிடித்த பாம்பு பிடி வீரர்…

ByKalamegam Viswanathan

Nov 12, 2024

டயர் நிறுவனம் குடோனுக்குள் புகுந்த சாரை காண்பி.., லாபமாக பிடித்த பாம்பு பிடி வீரர்…
மதுரை மாவட்டம் பழங்காத்தம் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் டயர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் உரிமையாளர் வீடும் மேலே இருப்பதால் காலை லிப்டில் இருந்து கீழே இறங்கி பார்க்கும் பொழுது பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது கண்ட காவலாளி உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். நிறுவன மேலாளர் காளமேகம் இடம் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காளமேகம் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபு அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பாம்பு வெளியே செல்லாதவர்களுக்கு எந்த வித அதிர்வு இல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள் யாரும் பாம்பு அருகே சென்று அதை சீண்ட வேண்டாம் என அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து பாம்பு அருகில் யாரும் செல்லாமல் பாம்பு வெளியே செல்லாமல் இருக்கவும் கண்காணித்துக் கொண்டே இருந்தனர் சம்பவ இடத்துக்கு வந்த ஸ்நேக் பாபு பாம்பு எங்கே உள்ளது என கேட்டார் பின் பீரோ அடியை பார்க்கும் பொழுது பாம்பு அங்கு இல்லை பின் ஒரு டேபிள் ஒன்று இருந்தது அதை லேசாக நகற்றி பார்த்தபோது சுமார் மூன்று அடி சாரைப்பாம்பு ஒன்று இருந்தது பின் அதை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து அடர்ந்த வனப் பகுதியில் சென்றார்.

மேலும் ஸ்நேக் பாபு கூறுகையில்..,
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் பாம்பை கண்டால் தயவுசெய்து யாரும் அடிக்காதீர்கள் என அதுவும் இவ்வுலகில் வாழக்கூடிய ஜீவன் ஒன்று தான் எனவும் பாம்பு இருப்பதனால் விவசாயிகளின் தோழன் என அனைவராலும் அழைக்கப்படுகின்றனர் பாம்பு இனத்தை நாம் அழைத்தால் பின் உணவிற்கு நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டியது தான் எனவும் எலிகள் வந்து தொல்லைகள் அதிகம் செய்யும் எனவும் பாம்பு இருப்பது எலிகள் வராமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் பாம்பை நாம் ஏதேனும் செய்து விடுவோம் என்று பயத்தில்தான் நம்மளை அது சீண்டுகிறதாகவும் முடிந்த அளவு பாம்பு கண்டால் தயவு செய்து அடிக்காமல் தங்கள் பாம்பு பிடி வீரர்களோ அல்லது தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தீர்கள் என்றால் உடனடியாக பாம்பை பிடித்து விடுவார்கள் என தெரிவித்தார்.