• Fri. Mar 29th, 2024

விஸ்வரூபமெடுத்த இராவணக்கோட்டம் பஞ்சாயத்து

இராவணக்கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா என்கிற தலைப்பில் மார்ச் 17 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில்”இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை மாலை நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் தயாரிப்பாளர் அதில் சென்னையில் இருக்கும் சினிமா பத்திரிகையாளர்களும் அழைத்துசெல்லப்படுகிறார்கள். அதனால் சர்ச்சைகள் எழுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாக இருந்து வருகிறது.தயாரிப்பாளரால் நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை தங்களுக்கு சாதகமானவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், பத்திரிகை துறைக்கு சம்பந்தமில்லாதவர்களையும் துபாய்க்கு அழைத்து செல்ல பயன்படுத்திக்கொள்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஆடியோ நிகழ்ச்சிகளில் மைக்செட் அமைப்பவரும் பத்திரிகையாளர், தினமலர் நிருபரும் பத்திரிகையாளர், தமிழ் சினிமாவை கழுவி கழுவி ஊற்றும் யூடியுபர்களும் பத்திரிகையாளர்கள் என பட்டியலிடப்பட்டு அழைத்துசெல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
18 பேர் மட்டுமே என தொடங்கிய பத்திரிகையாளர்கள் பட்டியல் 48 வரை என எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் மூலம் அழைத்து செல்ல பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களின் தகுதியின்மையையும், சுயநலம், மிரட்டலுக்கு அடிபணிந்ததை அப்பட்டமாக உணர்த்துகிறது என்கின்றனர் பத்திரிகையாளர்கள் எனக் குறிப்பிட்டிருந்தோம் துபாயில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு அரசு அமைச்சர் துரைமுருகன், லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரண், மற்றும் திரைபிரபலங்கள் கலந்துகொண்டது சம்பந்தமான செய்திகள் ஊடகங்களில் வெளியாகவில்லை. துபாய்க்கு சென்ற அச்சு ஊடக செய்தியாளர்கள் தங்கள் நிறுவனத்திடம் முறையான அனுமதி பெறாமல் சென்றுவந்ததால் செய்திகளை வெளியிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. பத்திரிகையாளர்களை துபாய்க்கு அழைத்து செல்ல சுமார் 50 லட்ச ரூபாய் செலவு செய்தும் ஒருவரி செய்தி கூட வரவில்லையே என கதாநாயகன் சாந்தனு அப்பாவும், இயக்குநருமான பாக்யராஜ் வருத்தப்பட்டதாக யூடியூப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இராவண கோட்டம் படம் சம்பந்தமான எந்த நிகழ்வாக இருந்தாலும் அதனை புறக்கணிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை சென்னையில்..இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இராவணக்கோட்டம் இசை வெளியீட்டு விழாவுக்கு பத்திரிகையாளர்களை அழைத்து செல்வதற்கான பட்டியலை தயாரித்து கொடுத்து அதன் மூலம் சில லட்சங்களை கமிஷனாக எடுத்துக்கொண்டார் என பத்திரிகையாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட தயாரிப்பாளர், சினிமா மீடியேட்டர், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி என பன்முகம் கொண்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவா முக்கிய விருந்தினராக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். தவறான ஒரு நபர் எப்படி இந்த மேடையில் என்கிற கேள்வி பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஏப்ரல் 19-20 ஆகிய இரு நாட்களும் சென்னையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பட்டியலை நடிகை சுஹாசினி அறிவித்தபோது மூத்த நடிகை, கலாஷேத்திரா மாணவி அமலா என கூறிய போது இடைமறித்த பத்திரிகையாளர் கார்த்தி என்பவர் ஏற்கனவே பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளாகியுள்ள கலாஷேத்திரா என்பது ஒருதகுதியா, என கேள்வி எழுப்ப நிகழ்ச்சியின் பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் குறுக்கிட்டு உங்கள் கேள்வி நியாயமானது.

இருப்பினும்நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத ஒன்றுவிட்டுடுங்க என பத்திரிகையாளரை சமாதானப்படுத்தியுள்ளார். அடுத்ததாக அம்மா கிரியேஷன் சிவா பேச அழைக்கப்படலாம் என்கிற நிலையில் இராவணக்கோட்டம் சீட்டிங் சிவாவிடம் மைக்கை கொடுங்கள் என பத்திரிகையாளர் கார்த்தி கூற அம்மா கிரியேஷன் சிவா புயல் வேகத்தில் அரங்கை விட்டு வெளியேறியது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராவணக்கோட்டம் இசை வெளியீடு முடிந்து மூன்று வாரங்களுக்கு பின்னரும் இந்தப் பிரச்சினை சம்பந்தமில்லாமல் எழுப்ப காரணம் என்ன என விசாரித்தபோது,
இராவணக்கோட்டம் படத்தின் ரீலீஸ் அதனையொட்டி படத்திற்கான ட்ரைலர் வெளியிடப்பட்டாலும் பத்திரிகையாளர்களை சந்திக்க படக்குழு தயாரிப்பில் தயக்கம் நிலவி வருகிறது. பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி பின் அவர்களை சந்திக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டு குறிப்பிட்ட சிலரை தனிப்பட்ட முறையில் அரசியல்வாதிகளை போல கணமாக கவனிக்க வேண்டும் என அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பாளரிடம் லட்சங்களில் மிகப்பெரும்தொகையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை வேறுபாடு இன்றி அனைவருக்கும் கொடுக்க திட்டமிடாமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கொடுத்தாராம். அது மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சங்கம் என்கிற பெயரில் தங்கள் சொந்த நிறுவனம் போன்று சங்கங்களை நடத்திவரும் தலைவர்களை கவனித்தால் போதும். அவர்கள் உறுப்பினர்களை சரி செய்து விடுவார்கள் என கூறியதை அறிந்த தனி நபர் நிறுவனமாக இருக்கும் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்களும், உறுப்பினர்களும் கொதிநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இராவணக் கோட்டம் துபாய் பஞ்சாயத்து மீண்டும் எழும்பியுள்ளது. கமிஷனுக்காக வேலை செய்பவர்களின் தனிப்பட்ட லாபத்திற்காக 9 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இராவணக்கோட்டம் திரைப்படத்தின் புரமோஷன் கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *