ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளது.
புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஒடேலா ஸ்ரீகாந்த். இவர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் தசரா. இப்படத்தில் நானி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
தெலுங்கில் உருவான தசரா திரைப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர். இப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், தசரா திரைப்படம் ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இந்த வார இறுதியிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதனால் இப்படம் ரூ. 200 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மறுபுறம் தசரா படத்துக்கு போட்டியாக தமிழில் வெற்றிமாறனின் விடுதலை மற்றும் சிம்பு நடித்த பத்து தல ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் தசரா திரைப்படம் தான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]