• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் சங்கரின் செயல் பாராட்டுதலுக்குரியது – காணொளியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்

ByN.Ravi

Apr 28, 2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்க
கூடிய மறவன்குளம் சாலையில், பார்வையற்ற பேனா வியாபாரி சாலையில் வலிப்பு வந்து சாலையில் மயங்கி விழுந்த போது, ஆஸ்டின்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் சங்கர், அவரை அங்கிருந்து மீட்டு சென்று முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கரை பாராட்டி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
பேருந்துக்கு முன்பு சாலையில் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய, ஆஸ்டின் பட்டி காவல் நிலைய சார்பாய்வாளர் சங்கரின், செயல்பாராட்டுதலுக்குரியது, போற்றுதலுக்குரியது. அவருடன் தொலைபேசியில் பேசி அவருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தேன் என்று அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.