மதுரை தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் சிறுவன் சுதர்ஸன் என்பவர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனக்கு பள்ளி விடுமுறை நாள்களில் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது மரங்களில் பொது மக்களால் அடிக்கப்பட்ட பதாகைகள் ஆணிகள் அகற்றும் பணியினை செய்கிறார்.

மரங்களில் ஆணிகள் அடிப்பதனால் மரங்கள் வாழ்நாள் குறைந்துவிடும் எனவும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை எனவும், மரங்கள் நம்மிடம் குறைந்து கொண்டே வருவதாலும் இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
தனது நான்கு வயது முதல் தற்போது வரை அவரது தந்தையுடன் இணைந்தும் பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து பசுமை களப்பணியில் ஈடுபடுகிறார்.






