• Wed. Sep 11th, 2024

சார்பு ஆய்வாளர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய பரபரப்பு CCTV காட்சிகள் வெளியீடு…

ByKalamegam Viswanathan

Sep 14, 2023

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விளக்கு பகுதியில் இன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி இவர் திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று காலை தனது டூவீலரில் திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியில் வந்தபோது., கீழ மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி ஸ்ரீ அரபின்டோ மீரா பள்ளி வாகனம் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சாலையை கடக்க முற்பட்டு உள்ளது.

சாலையை கடப்பதற்காக ஏற்கனவே அப்பள்ளியின் பேருந்து நின்று கொண்டிருந்தபோது., சொந்த ஊர் சென்று கொண்டிருந்த சிறப்பு சார்ப ஆய்வாளர் செல்லப்பாண்டி பள்ளி பேருந்தை கடக்க முற்பட்டபோது அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பேருந்து (31) எண் கொண்ட வாகனம் வேகமாக சாலையை கடக்க சிறப்பு சார்பு ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சார்பு ஆய்வாளர் கால் துண்டானது.

ரத்த வெள்ளத்தில் இருந்த சார்பு ஆய்வாளரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 31 வது பேருந்து இயக்கி வந்த மதுரையை சேர்ந்த பிரசாத் என்பது தெரிய வந்தது தற்போது இந்த விபத்தினுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

துவரிமான் விளக்கு பகுதியில் பள்ளிகள் பள்ளிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தனியார் குடியிருப்புகள் அதிகளவு இருப்பதால் அப்பகுதியில் முறையான சாலை பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அப்பதியில் பேரிகாடுகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *