

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் டெங்கு நோய் தீவிர ஒழிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது .
கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள், சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் சில மாணவர்கள் உள்ளிட்டோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இதேபோன்று டெங்கு காய்ச்சல் பாதிப்புககுள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்துவைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவருகிறது.
மாவட்ட முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு ஏடிஎஸ் கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரபடுத்த வேண்டும் எனவும், குழந்தைகள், சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிகூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்யவும், டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பெருங்குடி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் ஈடுபட்டனர் வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் டெங்கு கொசு உற்பத்தி ஆகுவது ஆய்வு செய்து ப்ளீச்சிங் பவுடர் மற்றும் மருந்து ஆகியவை தெளித்தனர்
மேலும் காய்ச்சல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து நிலவேம்பு கசாயம் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
- முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்…குமரிக்கு கிடைத்த பெருமை மிகுந்த பாராட்டு:முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர். தமிழ் நாட்டில் … Read more
- டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு … Read more
- சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”..!குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம், ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 ! சுந்தர் சி … Read more
- லைகா புரொடக்ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது…திரு. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் … Read more
- தூய்மை பணியில், கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை பாதுகாப்புப் படை..,கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியான கோவளம் ஊராட்சி பகுதியில் கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை … Read more
- சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா..!சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மாகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது முழு திருவுருவச் … Read more
- “ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்..!சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! … Read more
- காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து துப்புரவு பணி செய்த பா. ஜ. க வினர்…மதுரை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க. … Read more
- மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை.., போலீசார் விசாரணை…மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மேலவாசல் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 37) … Read more
- விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்…சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம … Read more
- மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெங்கடேசன் எம். எல். ஏ பங்கேற்பு..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் … Read more
- கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். … Read more
- பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட … Read more
- துளிர் அறம் செய் மையம் அமைப்பின், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..,துளிர் அறம் செய் மையம், காயல்பட்டினம் அமைப்பின் சார்பில், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார குழுவினரின் … Read more
- அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி … Read more
