• Tue. May 7th, 2024

குமரிக்கு பிரதமர் மோடி வந்தே பயனில்லை. அமிஷாவின் ரோடு ஷோ என்ன செய்யும் விஜய்வசந்த் கேள்வி.?

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி அல்லது பிரியங்கா இருவரில் யாராவது ஒருவர் வர இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து மக்களை அடமானம் வைத்த கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி என்று, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் குற்றசாட்டு. இரு மாநிலங்களுடைய கனிம வளங்கள் போக்குவரத்து என்பது ஒன்றிய அரசின் சட்டத்தின் கீழ் வருவது கூட தெரியாமல் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு முட்டாளாக இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பகிரங்க குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியினுடைய தொகுதி வேட்பாளர் விஜய்வசந்த் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் விஜய் வசந்த் கூறுகையில் .
நாளை முதல் வாகன பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிக்க இருப்பதாகவும், தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் என எந்த மக்களுக்கும் ஒரு நல்ல சட்டத்தை பாஜக கொண்டு வரவில்லை. அதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து மக்களை அடமானம் வைத்து விட்டதாக குற்றச்சாட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்பதற்காகவே பல திட்டங்களை குமரி மாவட்டத்தில் முடக்கம் செய்துள்ளார்கள். கல்வி அறிவு அதிகமாக பெற்ற இந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும், உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்றப்பட்டு அதன் மூலம் சுற்றுலா சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெறுவதற்கு வழிவகைகள் செய்யப்படும், நான்கு வழி சாலை பணிகளில் கூட 20 கிராமங்களில் 12 கிராமங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை . மத்திய அரசு மோடி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கூட எந்த பிரயோஜனமும் இல்லை. இதற்குள் அமித்ஷா வந்து ரோடு ஷோ நடத்தி அது வெறும் ரோடு ஷோவாக தான் இருக்கும் என்று கிண்டல் அடித்த விஜய்வசந்த் கனிமங்கள் இரு மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வது என்பது மத்திய அரசினுடைய சட்டப் பிரிவில் வருகிறது. இதை கூட தெரியாத பொன் ராதாகிருஷ்ணன் ஒரு முட்டாளாக இருப்பதாகவும், கனிம வளங்கள் இரு மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வருகிறார்கள். நான் மூன்று ஆண்டுகளாக என்னுடைய எம்பி பதவி மூலம் மத்திய அரசு வழியாக கிடைத்த ஊதியம் கூட நான் எடுக்கவில்லை. அதை ஏழை, எளிய மக்களினுடைய கல்விக் கடன் உள்ளிட்ட நல்ல திட்ட உதவிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இரு மாநிலங்களுக்கு இடையே கனிம வளங்கள் கொண்டு செல்வது என்பது மத்திய அரசின் சட்ட பிரிவுகள் வருகிறது. இந்த சட்டப்பிரிவை கூட தெரியாமல் பத்து ஆண்டுகள் இணையமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் ஒரு முட்டாளாக இருந்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *