• Thu. May 9th, 2024

விருதுநகர் பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் வியாபாரியிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி

ByG.Ranjan

Mar 31, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் நகரப் பகுதியான சுப்பையா நாடார் பள்ளி, கம்மாபட்டி, முத்துராமன்பட்டி, பார்த்திமா நகர், யானை குழாய் பகுதி, ராஜா காபி பார் பகுதி, தேவர் சிலை பகுதியில்தீவிர வாக்கு சேரப்பில் ஈடுபட்டனர். அதன் பின்பு விருதுநகர் பழைய பேருந்த நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஆண்கள், பெண்களிடம் வாக்கு சேகரித்தனர். முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜியும் வேட்பாளர் விஜய பிரபாகனும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன் பின்பு விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்த டீ கடைக்கு சென்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி டீ போட்டுக் கொடுத்து அதை வேட்பாளர் விஜய பிரபாகரன் பருகினார். அப்பொழுது அங்கு இருந்த பெண்கள் அனைவரும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனிடம் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததின் பெயரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அங்கிருந்த அனைத்து பெண்களிடமும் கை குலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பின்பு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உள்ள சாலையோரம் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வந்த பெண் வியாபாரியிடம் வேட்பாளரும் முன்னாள் அமைச்சரும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வாக்கு சேகரித்தனர். இதனால் தேசபந்து மைதானத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசபந்து மைதானத்தில் பேசிய வயதான ஒரு பெண்மணி, உங்கள் அப்பா கேப்டன் விஜயகாந்துக்காக உங்களை நாங்கள் வெற்றி பெற வைப்போம் என்று சொன்னது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அமைத்தலைவர் வக்கீல் எஸ்.ஆர்.விஜயகுமரன், சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர் டி.பி.எஸ். வெங்கடேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.தர்மலிங்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே. கண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சாந்தி , மாரியப்பன். முன்னா நகர செயலாளர் முகமது நெயினார், மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வக்கீல் ஸ்ரீதர், விருதுநகர் நகரத் துணைச் செயலாளர் பா. கண்ணன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.சரவணகுமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், கம்மாபட்டி சுரேஷ் குமார், நகர மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, நகர இலக்கிய அணி செயலாளர் சந்தோஷ் பாண்டியன், நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் பி.டி.ஆர்.சுந்தரபாண்டியன், அண்ணா தொழிற்சங்கம் பால்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ். சரவணன் மிக்கேல்ராஜ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் எஸ். எஸ். வி. செல்வராஜ் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ராஜ்குமார், கே. கே. எஸ். எஸ். என் நகர் கிளைச் செயலாளர் ராணி, சகுந்தலா ஆறுமுகம், விருதுநகர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் மகேஸ், இளைஞரணி செயலாளர் தல ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *