

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளிலும், இஸ்ரோ உள்ளிட்ட விஞ்ஞான கூடங்களில் இருப்பது கூட தெரியாமல் அண்ணாமலை கூமுட்டையாக உள்ளார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

