• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு…

Byகாயத்ரி

Jun 9, 2022

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் தேதி இன்று 3 மணிக்கு வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.