• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் உக்ரைன் அதிபர்

ByA.Tamilselvan

Jul 14, 2022

இலங்கை பொருளாதாரா நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில்உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றியபோது, உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.