

நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி. லேட்டஸ்டாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என பிரேம்ஜி கூறி வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் அறிவித்தார். பெண் பார்த்து, முடிவு செய்த விட்டதாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றார்கள். பின் அது குறித்து ஏதும் பேசப்படவில்லை! இதற்கிடையில் பாடகி ஒருவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் வதந்தி வேறு பரவியது.
இந்நிலையில் இன்று அவர் பதிவிட்டுள்ள மீம்சில், இன்னும் 5 வருடம் கழித்து அனைவருக்கும் திருமணமாகி இருக்கும், என்னையும் சிம்புவையும் தவிர என குறிப்பிட்டுள்ளார். இந்த மீம்ஸ் குறித்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்!