

சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய்யும் கிசுகிசுவில் சிக்கிக் கொண்டாராம். அவரை கிசுகிசுவிலிருந்து காப்பாற்றியவர் அவரின் தந்தை,எஸ்.ஏ.சந்திரசேகர் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது!
இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜய்யை ஹீரோவாக வைத்து நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார் சந்திரசேகர். இந்த படம் சுமாராக ஓடியது. இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா போன்ற திரைப்படங்களில் நடித்து ஓரளவு சினிமாவில் தனது முகத்தை பதியவைக்க முட்டிமோதிக் கொண்டு இருந்தார் விஜய்.
அந்த காலகட்டத்தில் தான், நடிகை சங்கவியுடன் விஜய்யை இணைத்து வைத்து கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளிவரத் தொடங்கின. இதற்கு காரணம் இவர்கள் இருவரும் ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு என பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதனால், இருவரும் காதலித்து வருவதாக பத்திரிக்கைகள் மறைமுகமாக எழுதத் தொடங்கிவிட்டன.
மகன் விஜய் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் தொடர்ந்தால் அது அவருடைய வளர்ச்சியை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய்யை அழைத்து இனி சங்கவியுடன் இணைந்து நடிக்காதே என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து சங்கவியுடன் இணைந்து நடித்தால், அது உன் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை கூறியுள்ளார்.
இதையடுத்தே விஜய் சங்கவியுடன் இணைந்து நடிக்கவில்லை, சங்கவி, பின் தெலுங்கு, மலையாளம் ,கன்னட படங்களில் நடித்து கடைசியாக கொளஞ்சி என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
