குடும்ப ஆடியன்ஸ், இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்த ஹீரோவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் டான் படத்தில் நடித்துள்ளார்! லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படம் மே 13ம் தேதி ரிலீசாக உள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 20 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்த படம் சிவகார்த்திகேயனின் முதல் பைலிங்குவல் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரெயபோஷப்காவும், ராஷி கன்னாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நவீன் பாலிஷெட்டி, சத்யராஜ், பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
தற்போது முக்கிய அப்டேட்டாக சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் வில்லனாக நடிக்க போவது பிரேம்ஜி அமரன் தானாம். படத்தில் இவருக்கு காமெடி சீன்களும் உள்ளதாம். அதோடு நெகடிவ் ரோலும் செய்கிறாராம். இந்த படத்திற்கு தமான் இசையமைப்பதாக கூறப்படுகிறது!