• Sat. Apr 27th, 2024

அரசியல் பேசும் குதிரைவால் திரைப்படம்!

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரை வால்’ திரைப்படம் என கூறுகின்றனர் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ்சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும், ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன.

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில்லுக்கருப்பட்டி, வாழ் ஆகிய படங்களுக்கு அடுத்து பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரில், “கனவுல தொலைச்சத நனவுல தேடுறன்”, “இதுவொரு உளவியல் போர்”, “கனவுக்கு மேக்ஸ்ல விடை இருக்கா?”, “மேக்ஸ்ல ஒரு Illusion theory இருக்கு” – இது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. வழக்கமான திரைப்படத்தில் இல்லாத புதிய கதைக் களம் கொண்டதாக இந்தப் படத்தின் திரைக்கதை இருக்கும் என்று டிரெயிலர் உணர்த்துகிறது

இந்தக் குதிரை வால் திரைப்படம் ஏன் திரையரங்குகளில் வெளியாக வேண்டும்?, இந்தப் படத்தைப் மக்கள் ஏன் பார்க்க வேண்டும்..? இந்தக் ‘குதிரை வால்’ திரைப்படத்தில் அப்படி என்னதான் சிறப்பு..? போன்ற கேள்விகளுக்கு படக் குழுதரப்பில் கூறுகையில், ‘நிறைய புதிய விஷயங்களை குதிரைவால் படத்தில் முயற்சி செய்திருக்கின்றோம் என்றாலும் இது ஒரு அரசியல் படம். அயோத்திதாசரின் ‘இந்திர தேச சரித்திரம்’தான் இந்தக் குதிரை வால் படத்திற்கு அடித்தளம். ஒரு மரபு வழிப் புனைவை, இன்னொரு புனைவால்தான் உடைக்க முடியும் என்ற அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எழுதப்பட்டது.

புனைவு மூலமாக ஒட்டு மொத்த வரலாற்றையும் இந்தக் குதிரை வால் படம் கேள்விக்கு உட்படுத்தும்.
குதிரை, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்றில் குதிரை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவே இருந்து வருகிறது என்பதை இந்தக் குதிரை வால் படம் சுட்டிக் காட்டும்.
இப்படத்தில் புதுமைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவில் இது ஒரு சீரியஸான படமும்கூட. பெரியாரின் பகுத்தறிவும் இப்படத்தில் இருக்கும். ஆனால் அது புனைவாகவும் இருக்கும். இப்படத்தில் தமிழ் சிறு பத்திரிக்கைகளின் தாக்கமும் உண்டு. இதில் மேஜிக்கல் ரியலிசமும் உண்டு… என்கிறது படக் குழு.இந்தக்

‘குதிரை வால்’ படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித் கூறுகையில், தமிழ்ச் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையைப் பற்றி இந்தக்குதிரை வால்படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி இந்தக் ‘குதிரை வால்’ காட்சிப்படுத்தி உள்ளது. வழக்கமான ஹீரோ-வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக தங்களை படத்துன் தொடர்பு செய்து கொள்ளக் கூடிய அளவில் இந்தப் படம் இருக்கும். திரையரங்குகளில் இந்தக் குதிரை வால்படம் தரும் புதிய அனுபவம் நிச்சயமாக ரசிகர்களிடையே பேசப்படும்..என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *