• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…

ByPrabhu Sekar

Feb 18, 2026

தேர்தல் அறிவிப்புகள் அமல்படுத்தப்படுமா கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஈசா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு திரும்பிய அவர், அங்கு கலந்து கொண்டது நல்ல அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பட்ஜெட்டில் 30 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன. ஆனால், தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தேர்தலுக்கு முன் அமல்படுத்த முடியுமா அல்லது தேர்தலுக்கு பிறகு அரசு அமைந்த பின் செயல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு மற்றும் மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்றார். ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும் என்றும், இறுதியில் மக்களின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஈசா மைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல். முருகன், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் உள்ளிட்ட பலரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார்.

பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்குமெனில் பிரதமரின் வருகையை வரவேற்போம் என்றும், தமிழ்நாடு முன்னேறி சிறப்புற வேண்டும் என்பதே முக்கியம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.