• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கணவரின் துன்புறுத்தலால் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை – உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு!..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி ரங்கன் தெரு பகுதியை சேர்ந்தவர் 33 வயதான பிரபாகரன். அதே பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரிதன்யா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ள நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.

8மாத கர்ப்பிணியான சோலையம்மாலுக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்று உள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் இரு தினங்களுக்கு முன்பு வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை இறந்தவிடவே, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு காரணமான பிரபாகரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் அரசு மருத்துவமனையில் பிணவரை முன்பாக கதறியழுது உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

8 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.