• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் பயிலரங்கம்..,

ByT. Balasubramaniyam

Mar 2, 2026

உலகத் திருக்குறள் கூட்டமைப்புப் பயிலரங்கம் சென்னை வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச்சங்கத்தில் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பயிலரங்கத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா சம்பத் வரவேற்றார். முதல் நிகழ்வாக,கூட்டமைப்பு நிர்வாகிகள்
அரங்கத்தின் முன்பு அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து,கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் வனிதா அறிமுகம் செய்துவைக்க , பிரான்சு நாட்டு முத்தமிழ்ச் சங்கத் தலைவர் அடியார்க்கு அன்பன் கோவிந்தசாமி ஜெயராமன் பயிலரங்கைத் தொடங்கி வைத்து திருவள்ளுவர் சிலைகளைப் பரிசாக வழங்கினார். 

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கடலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பூர்ணலிங்கம் மகாதேவன் உருவாக்கப்பட்ட வள்ளலார் நடத்திய திருக்குறள் வகுப்பு செயற்கையாக உருவாக்கப்பட்ட படம்திறந்துவைக்கப்பட்டது. பின்னர் திருக்குறள் அரசு மாத இதழ் வெளியிடப்பட்டது. 

கூட்டமைப்புத் துணைத் தலைவர் சீனி. பழமலை அறிமுகம் செய்துவைக்க, பன்னாட்டு லயன்ஸ் சங்க முன்னாள் கூட்டுமா வட்டத் தலைவர் வ. ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க ஆதிலிங்கம், அமைப்புச் செயலாளர் காசிநாதன் அறிமுகம் செய்துவைக்க. முற்போக்கு சமூக நீதிப்பேரவை நிறைவனர் டாக்டர் விமனாமூர்த்தி, துணைத் தலைவர் பிச்சு ஆதிலிங்கம் அறிமுகம் செய்துவைக்க, முனைவர் சரண்யா நாராயணமூர்த்தி, தலைமை நிலையச் செயலாளர் சிவஞானபாண்டியன் அறிமுகம் செய்துவைக்க,  உலகத் தமிழ் சிறகம் மருத்துவர் தணிகாசலம் ஆகியர் பயிலரங்க வகுப்பு நடத்தினார்.

நிறைவாகத் தலைமைத் துறை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கருத்துரை வழங்கி னர். தலைமைநிலையச் செயலாளர் முனைவர் சின்னதுரை நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நிலையில் , முடிவில் கூட்டமைப்பு பொருளாளர் பெ. சௌந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.